ஃப்ரஞ்ச் பூரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு (அவித்த சிறுதுண்டுகள்) - 250 கிராம்

பால் - 20 மேசைக்கரண்டி

பட்டர் - 25 கிராம்

சீஸ் - 25 கிராம்

உப்புத்தூள் - தேவையானளவு

மிளகுத்தூள் - தேவையானளவு

செய்முறை:

அவித்து வெட்டிய உருளைக்கிழங்குத்துண்டுகளை பாலுடன் சேர்த்து கிரைண்டரில் அடிக்கவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து அது சூடானதும் இக்கலவையை தாட்சியிலிட்டு காய்ச்சவும். இக்கலவையுடன் பட்டர், சீஸ், உப்புத்தூள், மிளகுத்தூள் சேர்க்கவும்.

அதன் பின்பு இக்கலவை நன்றாக இறுகித்திரளும் பதத்தை அடைந்ததும் இறக்கி (பாண், வாட்டிய இறைச்சி, நீராவியில் அவித்த மரக்கறியுடன்) பரிமாறவும்.

குறிப்புகள்:

ஃப்ரஞ்ச் பூரியை ஃப்ரான்ஸ் நாட்டு மக்கள் விரும்பி உண்பார்கள். இதில் புரதம், மாப்பொருள், மினரல், கால்சியம், உயிர்சத்துகள் அடங்கியுள்ளது. எச்சரிக்கை - இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனையுடன் உண்ணலாம். மாற்று முறை - பட்டருக்கு பதிலாக மாஜரினை பாவிக்கலாம்.