ஃபோளி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - ஒரு கப் சர்க்கரை (பொடித்தது) - சுவைக்கு பால் + நீர் (அ) பால் (அ) கண்டன்ஸ்டு மில்க் - தோசை மாவு பதத்துக்கு கரைக்க முட்டை - ஒன்று வெண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

மைதா மாவில் பொடித்த சர்க்கரை

கண்டன்ஸுடு மில்க் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.

ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து வைக்கவும்.

அடித்த முட்டையை மைதா கலவையில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

தோசை மாவை கல்லில் ஊற்றி மெல்லியதாக தேய்த்து மேலே பட்டர் தேய்க்கவும்.

இதை திருப்பி போட கூடாது. சிறுந்தீயில் நன்றாக வேகவிட்டு சுருட்டி எடுக்கவும்.

இப்போது சுவையான ஃபோளி தயார். செய்வது மிக சுலபம்

சுவை பிரமாதம்.

மாலத்தீவு சமையலில் பல வருட அனுபவம் உள்ள திருமதி. சித்ரா அவர்கள் செய்து காட்டியது.

குறிப்புகள்: