ஃபொனி ரோஷி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - ஒரு கப் சர்க்கரை - அரை கப் தேங்காய் - ஒரு முடி ஏலக்காய் - 5 - 10 பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி

செய்முறை:

தேங்காயுடன்

ஏலக்காய் சேர்த்து நீர் இல்லாமல் துருவல் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

மைதாவுடன் சர்க்கரை

பேக்கிங் பவுடர் மற்றும் தேங்காய் துருவல் கலவையை சேர்த்து கலந்து கொள்ளவும்.

தேவையான நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.

பிசைந்த மாவை மைதாவில் பிரட்டி மெல்லிய சப்பாத்திகளாக இடவும். பின் ஒரு மூடியால் ஒரே வடிவில் வெட்டி எடுக்கவும்.

பின் தோசை கல்லில் போட்டு மிகவும் சிறு தீயில் வைத்து இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும். மொறுமொறுப்பாக இருக்க வேண்டும்.

சுவையான மாலத்தீவு ஸ்பெஷல் ஃபொனி ரோஷி தயார்.

குறிப்புகள்: