ஃபொனி குலா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - ஒரு கப் சர்க்கரை - அரை கப் தேங்காய் - ஒரு மூடி ஏலக்காய் - 5 - 10 பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி முட்டை - ஒன்று (விரும்பினால்) வெனிலா / ரோஸ் எஸன்ஸ் - சில துளிகள் (விரும்பினால்) எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

தேங்காயுடன் ஏலக்காய் சேர்த்து நீர் இல்லாமல் துருவல் போல் அரைத்துக் கொள்ளவும்.

மைதாவுடன் சர்க்கரை

பேக்கிங் பவுடர்

தேங்காய் துருவல் கலவை சேர்த்து கலந்து கொள்ளவும்.

தேவையான நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.

சிறு சிறு உருண்டைகளாக்கி

வடைகளாக தட்டிக் கொள்ளவும்.

முட்டை சேர்க்க விரும்பினால் முட்டையுடன் எஸன்ஸ் சேர்த்து அடித்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்

வடையை முட்டை கலவையில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க பொரித்து எடுக்கவும். (முட்டை கலவையில் தோய்த்து எடுக்காமலும் பொரித்து எடுக்கலாம்).

சுவையான ஃபொனி குலா தயார்.

குறிப்புகள்: