ஃபுரோக்கோலி பஜ்ஜி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஃபுரோக்கோலி - 1

கடலை மாவு - 200 கி

மைதா - 2 ஸ்பூன்

அரிசி மாவு - 2 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

உப்பு - சிறிது

எண்ணெய் - பொரித்தெடுக்க

செய்முறை:

புரோக்கோலியை கொஞ்சம் காம்புடன் வைத்து சிறுசிறு துண்டுகளாக அரிந்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்.

ஒரு சட்டியில் தண்ணீர் வைத்து நன்றாக கொதிக்க விட்டு,புரொக்கோலி மீது மூழ்கும் அளவுக்கு ஊற்றி கொஞ்ச நேரம் அப்படியே வைக்கவும்.

சுடுநீரில் கொஞ்ச நேரம் போட்டால் அதில் புழு பூச்சிகள் இருந்தால் அவைகள் இறந்துவிடும்.

பிறகு நீரை வடிகட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,மைதா,அரிசி மாவு, மிளகாய் தூள்,கொஞ்சம் உப்பு போட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.

கரைத்த மாவில் ஒவ்வொரு துண்டு புரோக்கோலியையும் நனைத்து எண்ணெயில் போட்டு பஜ்ஜி போல் பொரித்துஎடுக்கவும்.சூடாக சாப்பிட நன்றாக இருக்கும்.மிளகாய் சாஸ் வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

புரோக்கோலி அதிக சத்தான ஒரு பொருள்.அதை இப்படி பஜ்ஜி செய்தால் வித்தியாசமாகவும்,விரும்பியும் சாப்பிடுவார்கள்.புரோக்கோலியை வேக வைக்காததால் அதன் சத்தும் அப்படியே நமக்கு கிடைக்கும்.எப்பொழுது புரோக்கோலி செய்தாலும் உப்பின் அளவை குறைத்துப் போடுங்கள்,ஏனென்றால் புரோக்கோலி அதிக உப்பை தாங்காது (அதாவது கொஞ்சம் உப்பு போட்டலும் சுல்லென்று இருக்கும்).