ஃபிஸி ஃப்ரூட் ட்ரிங்க் (Fizzy Fruit Drink)
0
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் (நடுத்தரமானது) - 2 தோடம்பழம் - ஒன்று ஆப்பிள் - பாதி ஸீரோ ஸ்ப்ரைட் - அரை கோப்பை
செய்முறை:
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். செய்ய ஆரம்பிக்கும் முன்பே ஸ்ப்ரைட்டைக் குளிரூட்டியில் வைத்து விடவும்.
ஆப்பிளைத் தோல் சீவி
நடுப் பகுதியை நீக்கி விட்டு
துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
வாழைப்பழத்தைச் சிறு வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
தோடம்பழத்தைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் நறுக்கி வைத்துள்ள பழங்களை போட்டு தோடம்பழ இரசத்தை சேர்த்து நன்கு அடிக்கவும்.
கடைசியாக ஸ்ப்ரைட்டைச் சேர்த்து அடித்து எடுக்கவும்.
உடனடியாக உயரமான கண்ணாடி டம்ளருக்கு மாற்றவும். க்ளேஸ்ட் செர்ரி
புதினா இலை வைத்து அலங்கரித்து
நீளமான கரண்டி வைத்துப் பரிமாறவும்.