ஃபிஷ் பன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 750 கிராம் பட்டர்/மாஜரின் - 100 கிராம் ஈஸ்ட் - 2 தேக்கரண்டி சீனி - 2 தேக்கரண்டி டின் ஃபிஷ் (பெரியது) - ஒன்று (அ) முள்ளிலாத மீன் - 250 கிராம் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 பெரிய வெங்காயம் - 250 கிராம் பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை எலுமிச்சை - பாதி முட்டை (மஞ்சள் கரு) - ஒன்று மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி மிளகுத் தூள் - காரத்திற்கேற்ப மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப எண்ணெய்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஈஸ்ட்டுடன் சீனி சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீரில் கரைத்து நுரைத்து வரும் வரை 15 நிமிடங்கள் வைத்திருக்கவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். டின் ஃபிஷ்ஷில் தண்ணீரை வடித்துவிட்டு மீனை உதிர்த்து வைக்கவும். முள்ளிலாத மீனாக இருந்தால் உப்பு

மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவுடன் பட்டர் மற்றும் உப்பு சேர்த்து நுரைத்த ஈஸ்ட் கலவையை ஊற்றி கையில் ஒட்டாமல் வரும் வரை நன்றாக பிசைந்து மேலே சிறிது எண்ணெய் தடவி

மூடி சூடான இடத்தில் வைக்கவும்.

இரண்டு மணி நேரம் கழித்து பார்த்தால் பிசைந்த மாவு இரு மடங்காகி இருக்கும். அதை ஒரே அளவில் 15 உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து

வெங்காயம்

பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி

தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

வதக்கியவற்றுடன் மீன்

உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அனைத்தும் ஒன்று சேர்ந்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு

எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து மசாலாவைத் தயார் செய்து வைக்கவும்.

உருட்டி வைத்துள்ள மாவில் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து தட்டி நடுவில் சிறிது மசாலாவை வைத்து படத்தில் காட்டியவாறு இரு புறமும் மடிக்கவும்.

பிறகு அதன் மேல் பக்கத்தையும் மூடி முக்கோண வடிவில் தயார் செய்து கொள்ளவும்.

மடித்த பகுதி கீழ் புறம் இருக்குமாறு பட்டர் தடவிய பேக்கிங் ட்ரேயில் இடைவெளிவிட்டு அடுக்கி அரை மணி நேரம் வைக்கவும்.

அரை மணி நேரத்திற்கு பிறகு மேலே முட்டையின் மஞ்சள் கருவைத் தடவி முற்சூடு செய்த அவனில் வைத்து 250 டிகிரியில் 15 - 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

காலை

மாலை

இரவு என எந்நேரத்திலும் சாப்பிடுவதற்கேற்ற சாஃப்ட் & டேஸ்டி ஃபிஷ் பன் ரெடி.

குறிப்புகள்: