ஃபிஷ் ஃபிங்கர்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சால்மன் மீன் - 200 கிராம் மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி மிளகு தூள் - கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு ரோஸ்மேரி (அ) புதினா - சிறிதளவு முட்டை - 2 கார்ன் ஃப்ளொர் (அ) ஆல் பர்பஸ் மாவு - ஒரு மேசைக்கரண்டி பார்மிசான் சீஸ் - 3 மேசைக்கரண்டி பூண்டு - 2 பல் ப்ரெட் - 5 துண்டுகள் எண்ணெய் - பொரித்தெடுக்க

செய்முறை:

மீனை சுத்தம் செய்து விரல் நீள துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

அதனுடன் உப்பு

மஞ்சள் தூள்

இஞ்சி பூண்டு விழுது

மிளகு தூள்

மிளகாய் தூள்

எலுமிச்சை சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

முட்டையின் வெள்ளைகருவை மட்டும் தனியே பிரித்தெடுக்கவும். அதனுடன் இரண்டு மேசைக்கரண்டி தண்ணீர் மற்றும் மாவு சேர்த்து அடித்து வைக்கவும்.

ப்ரெட்டை மிக்சியில் போட்டு பொடித்து வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.

அதனுடன் துருவிய பூண்டு

சீஸ்

பொடியாக நறுக்கிய ரோஸ்மேரி அல்லது புதினா சேர்த்து பிசறி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறிய மீன்துண்டை எடுத்து முட்டை கலவையில் முக்கி ப்ரெட்டில் பிரட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும். முட்டை கலவையில் அதிக நேரம் வைத்திருக்க கூடாது. அப்படி வைத்தால் மீனில் உள்ள மசாலா முட்டை கலவையில் கரைந்து விடக் கூடும். உள்ளே முக்கி உடனே எடுத்து ப்ரெட்டில் பிரட்ட தான் வேண்டுமே தவிர அங்கேயும் அதிக நேரம் விட்டால் ப்ரெட் க்ரம்ப்ஸ் நமுத்து விடும்.

சுவையான ஃபிஷ் ஃபிங்கர்ஸ் ரெடி. இதை மேயநீஸ்

டார்டர் சாஸ் அல்லது கெச்செப்புடன் பரிமாறவும்.

குறிப்புகள்: