ஃபிரெஞ் ஃபிரைஸ் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2 பெரியது

எண்ணெய் - பொரிப்பதற்கு

மிளகாய்த்தூள்/மிளகுதூள் - 1 தேக்கரண்டி

உப்பு

செய்முறை:

உருளைக்கிழங்கை 1/4 அங்குல தடிப்பில் நீளமாக வெட்டி சுத்தப்படுத்தவும்.

பின்னர் குளிர்ந்ததண்ணீரில் போட்டு 1 - 11/2 மணித்தியாலங்கள் ஃபிரிட்ஜில் வைக்கவும்.

பின்னர் எடுத்து ஈரம் ஒற்றி கொதிக்கும் எண்ணெயில் போட்டு 5 நிமிடங்களுகு பொரித்து எடுத்து பேப்பரில் போடவும். ( இந்த நிலையில் இவற்றை ஒரு பிளஸ்டிக் பையில் போட்டு ஃபிரீஸரில் சேமிக்கலாம்)

பின்னர் மீண்டும் எண்ணெய் நன்கு சூடானதும் அதனுள் பொரித்தவற்றைப் போட்டு மீண்டும் சிவக்க பொரித்து எடுக்கவும்.

சூடாக இருக்கும் போதே உப்பு, மிளகாய்/மிளகு தூள் சேர்த்து குலுக்கி விடவும்.

சுவையான ஃபிரெஞ் ஃபிரைஸ் தயார். உடனேயே சாப்பிடவும். நேரம் சென்றால் இளகிவிடும்.

குறிப்புகள்:

இதற்கு பேக் செய்ய பயன்படும் Russet Potatoes பாவிக்கவும்.