ஃபாண்டண்ட் (Fondant)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

Marshmallows - சிறிது 1/2 கப் அல்லது பெரிது 3 பவுடர்ட் சுகர் - 1/2 கப் + சிறிது ஜெல் ஃபுட் கலர்

செய்முறை:

முதலில் மார்ஷ்மெலோஸில் ஒரு மேசைக்கரண்டி நீர் விட்டு மைக்ரோவேவில் உருக்கவும். 20 நொடிகள் வைத்து எடுத்தாலே சற்று உப்பி வந்திருக்கும். கலந்து விட்டு மீண்டும் 20 நொடி வைத்து பார்க்கவும். மீண்டும் மீண்டும் கலந்து வைத்து நன்றாக உருகியதும் எடுக்கவும்.

இதில் சிறிது பவுடர்ட் சுகர் கலந்து கொண்டு மிச்சம் உள்ள பவுடர்ட் சுகரை டேபிள் மேலே பரப்பி கொள்ளவும். அதன் மேலே உருக்கிய மார்ஷ்மெலோவை ஊற்றி கொண்டு

கையில் வெண்ணெய் தடவிக்கொண்டு பிசைய ஆரம்பிக்கவும்.

மாவு கையில் ஒட்டாத பதத்துக்கு வரும் போது எடுக்கவும். ஃபாண்டண்ட் அழுத்தினால் மென்மையாக இருக்க வேண்டும்

அதே சமயம் கையில் ஒட்டாமல் வர வேண்டும். அதற்கு ஏற்றபடி சர்க்கரை அளவை மாற்றிக் கொள்ளவும்.

இதன் மேல் வெண்ணெய் தடவி அப்படியே க்லிங் ஷீட் போட்டு முழுவதும் மூடி ஒரு காற்று புகாத கண்டைனரில் வைக்கவும். இப்போது ஃபாண்டண்ட் தயார். இதை முன்பே செய்து தயாராக வைத்து கொண்டால் வேண்டிய போது எடுத்து பயன்படுத்தலாம்.

கலர் ஃபாண்டண்ட் தயார் செய்ய மார்ஷ்மெலோவை உருக்கியதுமே கலர் சேர்த்து கலந்து பின் பவுடர்ட் சுகரில் சேர்த்து பிசையலாம். அல்லது வெள்ளை ஃபாண்டண்ட் தயார் செய்து அதில் தேவையான ஜெல் கலர் கலந்து மீண்டும் பிசைந்து கொள்ளவும்.

இவை உருவமாக செய்யும் முன் சில மணி நேரங்கள் அப்படியே வைத்திருந்து பயன்படுத்தினால்

நல்ல பதமாக செய்ய வரும். உருவங்கள் செய்ய மீண்டும் பவுடர்ட் சுகர் சிறிது பரப்பி கொண்டு அதன் மேல் திரட்டி இதற்காக வரும் கட்டர் அல்லது வழக்கமான பிஸ்கட் கட்டர் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி உருவம் கொடுக்கலாம்.

இலைகள்

பூக்கள் என எல்லாமே அதற்கான அச்சு இல்லாமல் கெமிக்கல் க்ளே க்ராஃப்ட் செய்வது போல் செய்ய இயலும்.

இவற்றை சற்று வளைந்தது போல் இயற்கையான உருவம் கொடுக்க ரோலிங் பால் ஏதும் இல்லாமல் வெறும் தேக்கரண்டியின் பின் பக்கம் அல்லது உள் பக்கத்தில் போட்டு காய விட்டாலே வளைந்தது போல் காய்ந்து செட் ஆகி விடும்.

இவை எல்லாம் காய்ந்து பயன்படுத்த தயாராக குறைந்தது 8 மணி நேரம் வரை ஆகும். ஈரமாக இருக்கும் போது இவற்றை ஒன்றின் மேல் ஒன்றாக சுலபமாக ஒட்டி விடலாம். காய்ந்த பின் ஒட்ட ஐசிங் பயன்படுத்த வேண்டும்.

சுவையான சுலபமான மார்ஷ்மெலோ ஃபாண்டண்ட் தயார். விரும்பியபடி பயன்படுத்தலாம்.

குறிப்புகள்: