BBQ சிக்கன் (அ) க்ரில் சிக்கன்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ

காஷ்மீர் மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (அல்லது) சாதா மிளகாய் தூள் + ரெட் கலர்

ஷான் தந்தூரி மசாலா (அல்லது) சக்தி மசாலா - 2 தேக்கரண்டி

தயிர் - 1/2 கப்

எலுமிச்சை சாறு - 2

பூண்டு - 5 பல்

பச்சை மிளகாய் - 6

ஆலிவ் ஆயில் - 4 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை பெரிய ஹோல் லெக் பீஸாக வாங்கி வந்து அதை கொழுப்பெடுத்து விட்டு வினிகர் ஊற்றி ஊற வைத்து கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.

பூண்டு, பச்சை மிளகாய் மிக்ஸியில் அரைத்து அத்துடன் தயிர், ஷான் மசாலா, மிளகாய் தூள், உப்பு, லெமென் ஜுஸ் கலந்து சிக்கனில் தடவவும்.

தடவி ஒரு மணி நேரம் ஊறியதும் ஆலிவ் ஆயிலை ஊற்றி மறுபடியும் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறியதும் கேஸ் ஓவன் (அ) க்ரில் (அ) BBQ பண்ணவும்.

ப்ரீ ஹீட் செய்து விட்டு 20 நிமிடம் வைக்கவும்.

BBQ அடுப்பில் கரிமூட்டி மேலே உள்ள கம்பியில் வைத்து சுட்டு சாப்பிடவும்.

குறிப்புகள்: