ஹாரும் மானிஸ்





தேவையான பொருட்கள்:
வெண்ணெய் - 100 கிராம் (உருக்கிக் கொள்ளவும்)
முட்டை - 2
பால் அல்லது தேங்காய்பால் - 150 மி.லி
ப்ரவுன் சுகர் - 120 கிராம்
மைதா - 220 கிராம்
பைகார்பனேட் சோடா - 1 1/2 தே.கரண்டி
உப்பு - 1/4 தே.கரண்டி
கேரமல் சிரப் செய்வதற்கு:
சீனி - 180 கிராம்
தண்ணீர் - 250 மி.லி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சீனியை கொட்டி இலேசான தீயில் வைத்து சீனி நன்றாக உருகும் வரை கைவிடாமல் கிளறவும்.உருகினதும் தண்ணீரை ஊற்றி நன்றாக கரைக்கவும்.இப்பொழுது கேரமல் சிரப் தயார். இதை நன்றாக ஆற வைக்கவும்.
மைதா,பைகார்பனேட் சோடா, உப்பு இவற்றை சலித்துக் கொள்ளவும். அதனுடன் ப்ரவுன் சுகரை கலந்து கொள்ளவும்.
முட்டையை நன்றாக கரண்டியால் அடித்துக் கொண்டு அதனுடன் கேரமல் சிரப், உருக்கிய வெண்ணை, பால் இவற்றைக் கலந்துக்கவும்.
மாவின் நடுவில் இந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டியில்லாமல் கலக்கவும்.(கட்டி இருந்தால் வடிகட்டிக் கொள்ளவும்).
சின்ன சின்ன (2 inch உயரமுள்ள) கப்களில் எண்ணை தடவி இக்கலவையை ஊற்றி 15 லிருந்து 20 நிமிடம் வரை வேகவிடவும்.