ஹலுவிதா (Haluvidha)
0
தேவையான பொருட்கள்:
சைனா க்ராஸ் - 10 கிராம்
சர்க்கரை - 4 மேஜைக்கரண்டி
கண்டன்ஸ்டு மில்க் - 1 கப்
வெண்ணிலா எசன்ஸ் - சில துளிகள்
விருப்பமான ஃபுட் கலர் - சில துளிகள்
செய்முறை:
சைனா க்ராஸை 1 லிட்டர் கொதிக்கும் நீரில் விட்டு கரைய விடவும்.
கரைந்ததும் சர்க்கரை சேர்த்து கரைய விடவும்.
பின் வடிகட்டி கண்டன்ஸ்டு மில்க், ஃபுட் கலர், எசன்ஸுடன் சேர்த்து கலந்து ஒரு கொதி விட்டு செட் செய்யவும்.
செட் ஆன பின் டயமண்ட் ஷேப்பில் கட் செய்யவும்.