ஹரிரா
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பால் - ஒரு லிட்டர்
முட்டை - நான்கு
சர்க்கரை - தேவையான அளவு
நெய் - ஒன்றை தேக்கரண்டி
ஏலம் - மூன்று
பச்சரிசி - ஒரு தேக்கரண்டி
சாரப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
முந்திரி - பத்து
செய்முறை:
பச்சரிசியை முதலில் ஊறவைத்து முந்திரி சாரப்பருப்பு சேர்த்து அரைக்கவும்.
பால், ஏலம், சர்க்கரை, முட்டை இது நான்கையும் கலக்கிக் கொண்டு அடுப்பில் வைத்து கைவிடாமல் காய்ச்சவும்.
காய்ச்சி நல்ல ஆவி வந்ததும் அரைத்த கலவையை ஊற்றி கலக்கி கைவிடாமல் காய்ச்சி கடைசியில் நெய் விட்டு இறக்கவும்.