ஹரிதா
1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பால் - 1/2 லிட்டர்
தேங்காய் - 1/2 மூடி(துருவியது)
கசகசா - 1ஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு
முந்திரி - 7
பட்டை - 1
கிராம்பு- 1
ஏலக்காய் - 1
ரவை - 1 ஸ்பூன்
நெய்- 1 ஸ்பூன்
செய்முறை:
தேங்காய் துருவல்,முந்திரி,கசகசா ஒன்றாக சேர்த்து அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் நெய்யுடன் பட்டை,கிராம்பு,ஏலக்காய் சேர்த்து பொரிந்தவுடன் ரவை சேர்த்து வதக்கவும்.
பிறகு தேங்காய் பால் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்(கிளறிக்கொண்டே இருக்கவும்).
பிறகு பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
கொதித்த பிறகு சர்க்கரை சேர்க்கவும்.
கொஞ்ச நேரம் சிம்மில் வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
ஹரிதா தயார்.