ஹதீம் கஞ்சி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை - 200 கிராம் (குறைந்தது 4 அல்லது 5 மணி நேரம் ஊற வைக்கவும்).

கடலைப்பருப்பு - 80 கிராம் (2 மணி நேரம் ஊற வைக்கவும்).

கொத்து இறைச்சி - 1/4 கிலோ

நெய் - 150 கிராம்

முந்திரி பருப்பு அல்லது பாதாம் - 100 கிராம்

சீரகத்தூள் - 2 மேசைக்கரண்டி

மஞ்சத்தூள் - 1 தேக்கரண்டி

பட்டை - 3 இன்ச் அளவு

கிராம்பு - 6

ஏலம் - 6

கெட்டித்தேங்காய் பால் - 1 கப்

இஞ்சிப்பூண்டு விழுது - 1/2 கப்

பச்சை மிளகாய் - 15 (பொடிதாக நறுக்கவும்)

தக்காளி - 1/4 கிலோ (பொடிதாக நறுக்கவும்)

வெங்காயம் - 150 கிராம் (பொடிதாக நறுக்கவும்)

மல்லி இலை - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோதுமையை தண்ணீரில் உப்பு போட்டு வேகவைக்கவும். பாதி வெந்ததும் கடலப்பருப்பை சேர்க்கவும்.நன்றாக வெந்ததும் தேங்காய் பாலை ஊற்றவும். கொத்து இறைச்சியுடன் இஞ்சிப்பூண்டு விழுது, சீரகத்தூள், மஞ்சத் தூள் , உப்பு போட்டு வேகவிடவும். ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலம்,பச்சை மிளகாய் வெங்காயம்,தக்காளியை சேர்த்து வதக்கவும். வதங்கினதும் வேகவைத்த இறைச்சியை சேர்த்து மீண்டும் வதக்கவும். அதை கோதுமையில் கொட்டி நன்றாக கலக்கவும்.மேலே மல்லி இலையையும் வறுத்த முந்திரி பருப்பையும் தூவவும். இதோ சுவையான கஞ்சி தயார்.

குறிப்புகள்: