ஸ்வீட் பிரட்
0
தேவையான பொருட்கள்:
பிரட் ஸ்லைஸ் - 5
நெய் - 150 கிராம்
பால்கோவா - 50 கிராம்
சீனி - கால் கிலோ
தண்ணீர் - அரை லிட்டர்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
செய்முறை:
பிரட்டில் ஓரத்தை வெட்டிவிட்டு நெய்யில் பொரிக்கவும்.
சீனியை பாகு காய்ச்சவும் பொரித்ததை சீனி பாகில் போடவும் அதனுடன் பால்கோவாவை கலந்து விடவும். நன்கு ஊறியதும் குங்குமப்பூ மேலே தூவி பரிமாறவும்.