ஸ்பைசி சிக்கன் கிரேவி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 5 பீஸ்(லெக் பீஸ்)

இஞ்சி விழுது - ஒன்றரை தேக்கரண்டி

பூண்டு விழுது - ஒன்றரை தேக்கரண்டி

ஏலம் - 2

கிராம்பு - 4

கருவா - ஒரு துண்டு

உப்பு - ஒன்றரை தேக்கரண்டி

மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி

சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி

சோம்புதூள் - ஒரு தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி

வத்தல் தூள் - 2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - இரண்டரை தேக்கரண்டி

தனியாதூள் - 2 தேக்கரண்டி

வெங்காயம் - பாதி (பெரியது)

நறுக்கின தக்காளி - 5 மேசைக்கரண்டி

தேங்காய் பால் - 5 மேசைக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

இறைச்சி துண்டங்களை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். இஞ்சி, பூண்டு விழுதினை தேவையான அளவு எடுத்து வைக்கவும். இதர தேவையானப் பொருட்களை தயாராய் வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் பொடியாக நறுக்கவும்.

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கருவா(பட்டை), ஏலம், கிராம்பு போட்டு தாளிக்கவும்.

அத்துடன் இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்து லேசாக வதக்கவும்.

பின்னர் நறுக்கின வெங்காயத்தைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

அதன் பின் நறுக்கின தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

பிறகு எடுத்து வைத்துள்ள அனைத்து மசாலாத் தூள்களையும் சேர்த்து வதக்கி, உப்பு சேர்க்கவும்.

எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கியதும், சுத்தம் செய்து வைத்துள்ள கோழி இறைச்சியை சேர்த்து கிளறவும்.

இறைச்சி சற்று வெந்தவுடன் தேங்காய் பாலை ஊற்றி நன்கு கிளறி, சிறிது தண்ணீர் ஊற்றி தீயை குறைத்து வைத்து வேகவிடவும்.

கறி நன்கு வெந்ததும் கிரேவி போல் ஆனபின்பு இறக்கி பரிமாறவும். இது சப்பாத்தி, நாண், புரோட்டா உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்புகள்: