ஸ்பெஷல் தேங்காய் சட்னி
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - பாதி தேங்காய்
பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு - 5
பச்சை மிள்காய் - 3
இஞ்சி துருவல் - அரைடீஸ்பூன்
மல்லி இலை - சிறிது
புளி - சிறிது
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்
கடுகு - 1டீஸ்பூன்
உ.பருப்பு - 1டீஸ்பூன்
சீரகம் -கால்டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
பெருங்காய்ப்பொடி - பின்ச்
நறுக்கிய சின்ன வெங்காயம் - 4 (விரும்பினால்)
கருவேப்பிலை - 2இணுக்கு
செய்முறை:
துருவிய தேங்காய்,நறுக்கிய பச்சை மிளகாய்,பொட்டுக்கடலை,முந்திரி பருப்பு,இஞ்சி துருவல்,மல்லி இலை,புளி,உப்பு, தண்ணீர் தேவைக்கு சேர்த்து நல்ல பக்குவமாக அரைத்து எடுக்கவும்.
அரைத்ததை ஒரு பவுலில் எடுத்து வைக்கவும்.கெட்டித்தனமை அவரவர் விருப்பம்.
தாளிக்க எண்ணெய் விட்டு காயவும்,கடுகு,உ.பருப்பு,சீரகம்,கிள்ளிய வற்றல்,பெருங்காயப்பொடி,க்ருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து வைத்த சட்னியில் கொட்டி கலந்து பரிமாறவும்.விரும்பினால் நறுக்கிய சின்ன வெங்காயம் சிறிதும் தாளிக்கும் பொழுது சேர்க்கலாம்.
சுவையான ஸ்பெஷல் தேங்காய் சட்னி ரெடி.