ஸ்டீம்ட் சிக்கன்
0
தேவையான பொருட்கள்:
முழுகோழி - 1
விருப்பமான சிக்கன் மசாலா - 2 டீஸ்பூன்
சிக்கன் சூப் க்யூப் - 2
பப்ரிக்கா பவுடர் - சிறிது (விரும்பினால்)
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
முழுக்கோழியை சுத்தம் செய்து விருப்பம் போல் துண்டு போட்டுக்கொள்ளவும்.
அதனில் குறிப்பிட்ட பொருள் அனைத்தையும் சேர்த்து ஊற வைக்கவும், சிக்கன் க்யூப் தூள் செய்து சேர்க்கவும்.
தயார் செய்த சிக்கனை இட்லி பாத்திரத்தில் தட்டில் வைத்து அவிக்க வேண்டும். அடியில் நல்ல தண்ணீர் விட வேண்டும்.
நன்றாக கொதிவந்தவுடன் சிம்மில் வைத்து அரை மணி நேரம் வேக வைத்து எடுக்கவும். அதில் உள்ள சூப் ஸ்டாக் சூப் செய்ய பயன்படுத்தலாம்.
சுவையான ஸ்டீம்ட் சிக்கன் ரெடி. இதனை குபூஸ், ஹம்மூஸ், க்ரீன் சாலட், முத்தப்பல் சப்பாத்தி, நாணுடன் பரிமாறலாம்.