ஷிர் குர்மா
0
தேவையான பொருட்கள்:
வறுத்த சேமியா - 100கிராம்
பால் - 2லிட்டர்
சீனி - 1/4கிலோ
தண்ணீர் - 2கப்
நெய் - 5ஸ்பூன்
நறுக்கிய முந்திரி - 50கிராம்
நறுக்கிய பேரிச்சை பழம் - 50கிராம்
ஊறவைத்து நறுக்கிய பாதாம் - 50கிராம்
ஏலக்காய் - 5
செய்முறை:
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்தவுடன் முந்திரி, பாதாமை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
தண்ணீரில் சீனி போட்டு நன்றாக பாகு பதத்தில் காய்ச்சவும்.
பாலை தண்ணீர் சேர்க்காமல் நன்றாக 1லிட்டர் ஆகும் வரை காய்ச்சவும்.
அதன் பின்பு வறுத்த சேமியாவை சேர்க்கவும். பிறகு பேரிச்சைபழத்தை போட்டு காய்ச்சவும்.
சீனி பாகை சேர்த்து கலக்கவும். ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பாதாம் கலந்து 5 நிமிடம் கழித்து இறக்கி சூடாக பரிமாறவும்.