வெல்ல கோடா (இனிப்பு)
தேவையான பொருட்கள்:
கோடா - இரண்டு டம்ளர்
வெல்லம் - ஒரு டம்ளர்
கடலைப்பருப்பு - கால் டம்ளர்
தேங்காய் - இரண்டு பத்தை
ஏலாக்காய் - மூன்று
நெய் - ஒன்றரை மேசைக்கரண்டி
பால் - ஒரு டம்ளர்
சாஃப்ரான் - ஐந்து இதழ்
முந்திரி, பிஸ்தா, பாதாம், கிஸ்மிஸ் பழம் - 50 கிராம்
செய்முறை:
கோடாவை அரை மேசைக்கரண்டி நெய்யில் லேசாக வறுத்து கொள்ள வேண்டும்.
கடலைப்பருப்பை கிள்ளு பதமாக சுண்டலுக்கு போடுவது போல் வேகவைத்து தனியாக வைக்கவும்.
வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து லேசாக சூடுப்படுத்தி கல்லில்லாமல் வடித்து வைக்கவும்.
வடித்த வெல்ல தண்ணீரில் மேலும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஏலக்காயை ஒன்றும் இரண்டுமாக இடித்து சேர்த்து கொதிக்க விட்டு அதில் வறுத்து வைத்த கோடாவை சேர்த்து நன்கு வேக விடவும்.
முக்கால் பாக வேகும் போது நட்ஸ் வகையில் பாதியை பால் சேர்த்து அரைத்து சேர்த்து கிளறவும். வேக வைத்துள்ள கடலைப்பருப்பையும் சேர்க்கவும்.
நன்கு கொதித்து கிரிப்பனதும் நெய்யில் நட்ஸ் வகைகள், கிஸ்மிஸ் பழம், தேங்காயை பொடியாக அரிந்து சேர்த்து வறுத்து கோடாவில் சேர்க்கவும்.
கடைசியில் சாப்ரானை தூவி இறக்கவும்.
அருமையான வித்தியாசமான சுவையுடன் வெல்ல இனிப்பு கோடா ரெடி.