வெண்டைக்காய் இறால் தீயல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவியது - 1கப்

வெண்டைக்காய் 100 கிராம் 1" துன்டுகளாக வெட்டிக்கொள்ளவும்

இறால் - சுத்தமாக கழுவியது 1கப்

வெங்காயம் - நறுக்கியது 1 மேசைகரண்டி

முழு தனியா 2 மேசைகரண்டி

சிவப்பு மிளகய் - 10 காரதிற்க்கு ஏற்ற மாதிரி அடிகமாக்கி கொள்ளவும்

மஞசள் தூள் - 1/2 தே.கரண்டி

சோம்பு- 1/2 தே.கரண்டி

புளி கரைசல் ௧ கப்

மிளகு 1 தே.கரண்டி

உப்பு

கடுகு ௧தே.க

கறிவேப்பிலை 1கொத்து

செய்முறை:

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து,சூடானவுடன் தேங்காய் துருவல்,தனியா,மிளகாய்,மிளகு,சோம்பு,கறிவேப்பிலை,வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.(கருகிவிடாமல் பார்த்தூக்கொள்ளவும்

தேங்காய் நன்றாக சிவந்ததும் இரக்கி லேசாக ஆற விடவும்.

பின்பு மிக்ஸியில் நைசாக அரைத்துக்கொள்ளவும்

அடுப்பில் சட்டியை வைத்து 1தே.க எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,தாளித்து சிறிது வெங்காயம் போட்டு சிவக்க விடவும்

புளி கரைசலில் அரைத்த மசாலா போட்டு கலந்து உப்பு,புளிப்பு காரம் சரிபார்த்து கொள்ளவும்.

சட்டியில் வெஙாயம் சிவந்ததும் அரிந்து வைத்துள்ள வென்டைகாயய் போட்டு கொள கொளப்பு பொகும்வரை வதக்கவும்

அடுத்து இராலை போட்டு சிறிது வதக்கி குழம்பை அதில் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்

குறிப்புகள்: