வெண்டைக்காய் இறால் சம்பல்
0
தேவையான பொருட்கள்:
இறால்( காய்ந்தது ) - கால் கிலோ
மிளகாய் வற்றல் - 2
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 10
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வெண்டைக்காய் - கால் கிலோ
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
செய்முறை:
இறால், மிளகாய் வற்றல், மிளகாய், சின்ன வெங்காயம், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து மிக்ஸியில் கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும்.
வெண்டைக்காயை கழுவி கட் பண்ணி, நாண் ஸ்டிக் பானில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சிறிது உப்பு போட்டு வதக்கி வைக்கவும்.
கடாயில் மீதி உள்ள எண்ணெய் விட்டு மிக்ஸியில் அரைத்த இறால் கலவையை போட்டு 5-8 நிமிடம் சிம்மில் வைக்கவும், வதக்கவும் .
வதங்கிய பின் வெண்டைக்காய் சேர்த்து வதக்கி கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான இறால் வெண்டைக்காய் சம்பல் ரெடி.