வெண்டைக்காய் ஆனம்
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - கால் கிலோ
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
மல்லி இலை, கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மல்லி பொடி- 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி - அரை ஸ்பூன்
சீரகப்பொடி - அரை ஸ்பூன்
மஞ்சள் பொடி- கால் ஸ்பூன்
புளி - நெல்லியளவு
கடுகு - அரைஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அரைஸ்பூன்
வெந்தயம் - அரைஸ்பூன்
மிளகாய் வற்றல் -2
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
வடிகஞ்சி - 2 -3 கப்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
முதலில் வெண்டைக்காயை கழுவி 'துடைத்து் ஒரு இன்ச் அளவிற்கு கட் செய்து கொள்ளவும். தக்காளி, வெங்காயம், மல்லி இலை கட் செய்யவும். புளிக் கரைத்து கொள்ளவும்.
ஒரு குக்கரில் புளி கரைத்தது, வெண்டைக்காய், தக்காளி, பாதி வெங்காயம், இஞ்சி பூண்டு, மசாலா பொடிகள், மல்லி இலை, உப்பு சேர்த்து ஒரு விசில் வைத்து இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், மிளகாய்வற்றல், கறிவேப்பிலை, வெங்காயம் தாளித்து சிவக்க வதக்கவும். குக்கரில் வெந்த வெண்டைக்காய் மசாலாவை ஊற்றவும். வடிகஞ்சி சேர்க்கவும். சிம்மில் வைத்து சிறிது நேரம் கழித்து இறக்கவும்.
சூப்பர் சுவையுள்ள வெண்டைக்காய் ஆணம் ரெடி. இதனை குழம்பு போல் சாதத்தில் விட்டு சாப்பிடலாம்.