வெஜ்பிட்ஸா தோசை (குழந்தைகளுக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 2 கப்

காய்கறி கலவை - 2 1/2 கப்

வெங்காயம் - 1/2 கப்

தக்காளி - 1/4 கப்

முட்டைகோஸ் - 1/2 கப்

கேரட் - 1/2 கப்

பீன்ஸ் - 1/4 கப்

பச்சைபட்டாணி - 1/4 கப்

சோளமணி - 1/4 கப்

உப்பு - 1 டீஸ்பூன்

வொயிட் பெப்பர் - 2 டீஸ்பூன்

பச்சைமிளகாய் - 1

பூண்டு - 3 பல்

சர்க்கரை - ஒரு பின்ச்

சோயாசாஸ் - 1 டீஸ்பூன்

தக்காளி சாஸ் - 1/2 கப்

சீஸ் துருவியது - 1 கப்

செய்முறை:

தோசை மாவில் உப்பு, நல்ணெண்ணெய் 1/2 டீஸ்பூன், 1 பின்ச் சர்க்கரை போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

நாண் ஸ்டிக் பேனில் இரண்டு டீஸ்பூன் பட்டர் ஊற்றி, முதலில் ஒரு பின்ச் சர்க்கரை, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் பூண்டைப் போட்டு வதக்கவும்.

பிறகு வெங்காயம் முதல் எல்லா காய்கறிகளையும் ஒவ்வொன்றாக போட்டு வதக்கி உப்பு, வொயிட் பெப்பர், சோயாசாஸ் போட்டு வதக்கவும்.

ரொம்ப வேகவிட வேண்டாம். கலவையை ஆற விடவும்.

தோசை கல்லில் மாவை ஊற்றி சுற்றியதும், இரண்டு டேபிள் ஸ்பூன் காய்கறி கலவையை வைத்து பரப்பி விட்டு மேலே சுற்றிலும் எண்ணெய் ஊற்றி மேலே சீஸை தூவி தக்காளி சாஸை (டொமேட்டோ சாஸை) அதன் மேல் (ஸ்பிரிக்குள்) ஆங்காங்கே தூவி வேக விட்டு திருப்பி போடவேண்டாம். மொருமொருவென்று ஆனதும் எடுத்து விடவும்.

குறிப்புகள்: