வாடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாடா செய்ய:

சாதம் - ஒரு கப்

ரவை - அரை கப்

அரிசி மாவு - கால் கப்

வாழைப்பழம் - ஒன்று

உப்பு - தேவைக்கு

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

வறுத்த இறால் (அ) காய்ந்த இறால் - 20

எண்ணெய் - பொரிக்க

மேவா(உள்ளடம்) செய்ய:

சின்ன வெங்காயம் - 15

பச்சை மிளகாய் - 2

வறுத்த இறால் - 8

பெருஞ்சீரகம் - அரை தேக்கரண்டி

நெய் - ஒரு மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

தேங்காய்ப்பூ - ஒரு கப்

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.

சாதம் மற்றும் வாழைப்பழத்தை தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்தவற்றுடன் ரவா மற்றும் அரிசி மாவு சேர்த்து கிளறி 6 மணி நேரம் வைத்து விடவும்.

மாவு புளிப்பேறியதும் சிறிது உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து உளுந்து வடை போல தட்டி, வறுத்த இறாலை அதன் மேல் வைக்கவும்.

வாணலில் எண்ணெய் விட்டு சூடேறியதும் தட்டி வைத்துள்ள வாடாவை பொரித்து எடுக்கவும்.

மேவா செய்வதற்கு வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது நெய் விட்டு சூடானதும் பெருஞ்சீரகம போட்டு தாளிக்கவும். பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இறால், உப்பு, மஞ்சள் தூள அனைத்தையும் சேர்த்து நெய்யில் வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், தேங்காய்ப்பூ சேர்த்து இறக்கவும்.

குறிப்புகள்:

வாடாவை, மேவாவுடன் சேர்த்து பரிமாறவும்.

இது கடலோர இஸ்லாமிய ஊர்களில் காலை, மாலை சிற்றுண்டியாக சாப்பிடப்படுகின்றது. மாவை இடித்து, கஞ்சியாக காய்ச்சி செய்வது தான் பழமையான முறை. மேற்கூறிய முறையில் செய்தாலும் அதே சுவையுடன் எளிதாக செய்து விடலாம்.