வறுமாவு அடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி - அரை படி

சிறிய தேங்காய் - ஒன்று

முட்டை - ஒன்று

நாட்டு வெங்காயம் - கால் கிலோ

பச்சை மிளகாய் - 4 அல்லது 5

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - 100 மில்லி

உப்பு - 2 ஸ்பூன்

செய்முறை:

அரிசியை கழுவி, உலர்த்தி எடுத்து, ஆலையில் கொடுத்து ரவா பதத்தில் அரைத்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு அதை ஒரு வாணலியில் கொட்டி லேசான தீயில் வைத்து, முறுகிவிடாமல் வறுத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காயை துருவி திக்கான பால் பிழிந்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை சன்னமாக நறுக்கி சிறிது எண்ணெயில் வதக்கிக் கொள்ள வேண்டும்.

சற்று சூடு ஆறியவுடன், அதை மாவில் கொட்டி அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும்.

முட்டையை நன்றாக கலக்கி மாவில் ஊற்றி, பிழிந்து வைத்துள்ள தேங்காய்ப் பாலையும் ஊற்றி நன்றாக கலந்து 2 மணி நேரம் ஊற விட வேண்டும்.

பிறகு ஒரு ஆப்ப சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி 2 பக்கமும் பொன்முறுகலாக சுட்டு எடுக்க வேண்டும்.

குறிப்புகள்: