வறுத்தரைத்த கோழிக் குழம்பு

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வறுக்க:

தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 2

சோம்பு - அரை தேக்கரண்டி

தேங்காய் துருவல் - ஒரு கப்

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

மல்லித்தூள் - 3/4 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி

குழம்பிற்கு:

எண்ணெய் - 3 தேக்கரண்டி

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

தக்காளி - ஒன்று

கறிவேப்பிலை - 10 இலை

கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி

கோழிக்கறி - அரை கிலோ

செய்முறை:

முதலில் தேங்காய் எண்ணெயை காயவைத்து அதில் சின்ன வெங்காயம், சோம்பு போட்டு பொரிந்ததும் அதில் தேங்காயை போட்டு நல்ல பொன்னிறமாக வறுக்கவும்.

பின்பு அதில் பொடிகளை சேர்த்து மேலும் 5 நிமிடம் மிதமான தீயில் இட்டு வறுத்து ஆறியதும் தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.

எண்ணெயை காயவைத்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதங்கியதும், இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து மேலும் வதக்கி கோழியை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் தீயை குறைத்து 35 நிமிடம் வேக விடவும்.

இப்பொழுது சுவையான வறுத்தரைத்த கோழிக் குழம்பு தயார்.

குறிப்புகள்: