வணக்கம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - இரண்டு கப்

வெல்லம் - ஒரு கப் (தூள் செய்தது)

தேங்காய் - ஒரு கப் (துருவியது)

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு சட்டியில் 1 1/4 கப் தண்ணீரில் கொஞ்சம் உப்பு, ஒரு சொட்டு நெய் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்ததும் அரிசி மாவை ஒரு கையால் போட்டுக்கொண்டே மறு கையால் ஒரு கட்டை கரண்டி வைத்து கிளறவும். கிளறி கொஞ்சம் நேரமானதும் ஒரு ஈர துணியில் மூட்டைக்கட்டி வைக்கவும். பிறகு சிறிது நேரம் கழித்து அடுத்து லேசாக குழைத்து அதை பத்து உருண்டைகளாக்கவும்.

ஒவ்வொரு உருண்டையும் எடுத்து கட்டை விரலை நடுவில் வைத்து குழியாக்கி அதில் கொஞ்சம் வெல்லம்,தேங்காய் துருவல் வைத்து மூடி உருண்டையை மூடி விடவும். இதே போல எல்லா உருண்டையையும் செய்து ஒரு இட்லி சட்டியில் மேலே உள்ள தட்டில் ஒரு ஈரத்துணியை (ஒரு கர்சீப் போதுமானது) விரித்து வைத்து அதில் எல்லா உருண்டைகளையும் ஒன்றன் மேல் ஒன்று ஒட்டாதபடி வைத்து மேலே உள்ள துணியை மூடி இட்லி சட்டியை மூடி வைத்து பத்து நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.

குறிப்புகள்: