ரோல்ஸ் 2
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 1 1/2 கப்
முட்டை - 2
உப்பு
ஸ்மோக்டு டூனா - 1 டின்
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு - 1 தேக்கரண்டி
உருளைகிழங்கு - 1
பட்டாணி - 1 கைப்பிடி [விரும்பினால்]
கறிவேப்பிலை
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவைக்கு
ப்ரெட் க்ரம்ப்ஸ் - தேவைக்கு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை - 1/2
செய்முறை:
மேல் மாவுக்கு - 1 கப் மைதா மாவுடன் உப்பு மற்றும் ஒரு முட்டை அடித்து தேவையான நீர் விட்டு ஃபோளி செய்யும் மாவு போல கலந்து வைக்கவும்.
இதை தோசை கல்லில் சிறு சிறு தோசை போல் (ஃபோளி) செய்து எடுக்கவும்.
உருளைக்கிழங்கு, பட்டாணி வேக வைத்து வைக்கவும்.
இவற்றுடன் பொடியாக நறுக்கிய டூனா, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
இப்போது செய்து வைத்த ஃபோளியின் நடுவே மீன் கலவை வைத்து ரோல் செய்யவும்.
1/4 கப் மாவை பேஸ்ட் போல் செய்து கொண்டு ரோல் மேல் தடவி திறந்து இருக்கும் பக்கங்களை நன்றாக ஒட்டி விடவும்.
மீதம் உள்ள 1/4 கப் மாவை நீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து நீர்க்க கலந்து வைக்கவும்.
1 முட்டையை நன்றாக அடித்து தனியாக வைக்கவும்.
இப்போது செய்த ரோல் ஒவ்வொன்றாக எடுத்து மைதா கலவையில் முக்கி எடுத்து, பின் முட்டையில் பிரட்டி எடுத்து ப்ரெட் க்ரம்ப்ஸில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சுவையான ரோல்ஸ் தயார்.