ரைஸ் புட்டிங்
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - அரை கப்
தேங்காய் பால் - ஒரு டம்ளர்(திக்கான பால்)
சீனி - முக்கால் கப்
முட்டை - 2
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சீனியை போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.
பிறகு அதனுடன் அரிசி மாவை போட்டு தேங்காய் பால், உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து கலந்து விட செய்யவும்.
குக்கரில் வைக்கும் பாத்திரத்தில் இந்த கலவையை ஊற்றி நெய் சேர்த்து கலந்து விடவும்.
எலக்ட்ரிக் குக்கரிலோ அல்லது ப்ரஷர் குக்கரிலோ இந்த கலவையை வைத்து வேக விடும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அந்த கலவையை உள்ளே வைத்து ஒரு முறை நன்கு கலக்கி விட்டு மூடி போட்டு ப்ரஷர் குக்கராக இருந்தால் ஒரு விசில் வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு மணி நேரம் வேக விடவும்.
எலக்ட்ரிக் குக்கராக இருந்தால் இந்த கலவை வேக ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை ஆகலாம்.
அதன் பின்னர் ஒரு கத்தியை வைத்து குத்தி பார்த்து ஒட்டாமல் வந்தால் எடுத்து விடவும்.
விரும்பிய வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறவும். விரும்பினால் வறுத்த முந்திரிகளை கொண்டு அலங்கரிக்கலாம். மிகவும் சுவையான மாலை நேர சிற்றூண்டி.