ரேஷ்மீ சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2கிலோ

நறுக்கிய வெங்காயம்- 2

அரைத்த வெங்காயம்- 1

தக்காளிப்யூரி - 5ஸ்பூன்

பாலாடை - 1/2கப்

இஞ்சி பூண்டு விழுது- 2ஸ்பூன்

ப.மிளகாய்- 6

மிளகுத்தூள்- 1ஸ்பூன்

மிளகய்த்தூள்- 1/2ஸ்பூன்

சோயாசாஸ்- 1/2ஸ்பூன்

கரம்மசாலா- 1ஸ்பூன்

கொ.மல்லி- கொஞ்சம்

அரைத்த முந்திரி விழுது - 1/4கப்

உப்பு, எண்ணெய்- தேவைக்கு

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக பொன்னிறமாக வதக்கி தனியாக எடுத்து

வைக்கவும்.

அதே எண்ணெயில் அரைத்த வெங்காயம் , ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

இஞ்சிபூண்டுவிழுது, தக்காளி ப்யூரி, பாலாடை போட்டு வதக்கவும்.

சிக்கனை போட்டு வதக்கிய பின்பு மிளகுத்தூள், மிளாகாய்த்தூள், முந்திரிவிழுது சேர்த்து 10நிமிடம் பிரட்டவும்.

பிறகு உப்பு சோயாசாஸ் ஊற்றி 10நிமிடம் குறைவான தணலில் வைத்து இறக்கவும்

பரிமாறும் முன்பு வறுத்து வைத்த வெங்காயத்தை மேலே போட்டு எலுமிச்சைசாறு ஊற்றி பரிமாறவும்.

குறிப்புகள்: