ரெட் மட்டன் மசாலா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கறி - 1/2கிலோ

வெங்காயம் - 3

தக்காளி - 3

இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்

மிளகாய் தூள் - 1ஸ்பூன்

ஏலக்காய்,பட்டை - தலா 2

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் எண்ணெய் முழுவதையும் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

காய்ந்ததும்,அதில் ஏலக்காய்,பட்டை சேர்க்கவும்.

பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி பின் மிளகாய் தூள் சேர்க்கவும்.

சிறிது வதக்கிய பின் நறுக்கிய தக்காளி,கறிவேப்பிலை சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

அடுத்து கழுவிய கறியை சேர்த்து உப்பு போட்டு நன்கு வதக்கவும்.குக்கரை மூடி முன்று விசில் வரும்வரை அடுப்பில் வைக்கவும்.

கறி வெந்ததும் சூடாக பறிமாறவும்

குறிப்புகள்: