ரவை புட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - ஒரு கப்

சர்க்கரை - கால் கப்

தேங்காய் துருவல் - கால் கப்

உப்பு - ஒரு பின்ச்

நெய் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

ரவையை லேசாக சிவக்க வறுக்கவும்.

ஆறியதும் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் உப்பு சேர்த்து தெளித்து புட்டுக்கு விரவுவது போல் விரவி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

இட்லி பானையில் ஒரு ஈரத்துணியை விரித்து ஊறிய ரவை கலவையை வைத்து பத்து நிமிடம் அவித்தெடுக்கவும்.

வெந்ததும் அதில் சூடாக இருக்கும் போது நெய், சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து சாப்பிடவும்.

குறிப்புகள்: