ரசமலாய்
தேவையான பொருட்கள்:
கொதிக்க வைக்க:
பால் - ஒரு லிட்டர்
ஏலக்காய் - இரண்டு
குங்குமப்பூ - ஒரு பின்ச்
பிஸ்தா - ஐந்து (ஊறவைத்து பொடியாக நறுக்கவும்)
சர்க்கரை - 150 கிராம்
மாவு கலக்கி கொள்ள:
பால் பவுடர் - ஒரு ஆழாக்கு
முட்டை - ஒன்று
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
உருக்கிய நெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
பாலில் ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும்.
பால் கொஞ்சம் சுண்ட வேண்டும் தீயை குறைத்து வைத்து விடவும்.
அதற்குள் ஒரு பெரிய பவுளில் பால் பவுடர், பேக்கிங் பவுடர், முட்டை சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவில் நெய்யை உருக்கி ஊற்றி மேலும் பிசையவும். அப்பதான் கையில் ஒட்டாமல் வரும்.
இப்போது சிறு சிறு உருன்டையாகவோ (அ) உங்களுக்கு வேண்டிய வடிவில் உருட்டி கொதித்து கொண்டிருக்கும் பாலில் போட்டு இரண்டு நிமிடதில் இறக்கி விடவும்.
உருண்டையாக போடுவதற்கு முன் பொடியாக நறுக்கிய பிஸ்தாவையும் குங்குமப்பூவையும் போடவும்.
ஆறியதும் பிரிட்ஜில் குளிர வைத்து சாப்பிடவும்.