மொச்சைகொட்டை கருவாட்டு குழம்பு
தேவையான பொருட்கள்:
மொச்சைகொட்டை - அரை கப்
உருளைக்கிழங்கு - ஒன்று பெரியது
முருங்கைக்காய் - ஒன்று
கத்திரிக்காய் - மூன்று
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
புளி - ஒரு எலுமிச்சை அளவு
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - இரண்டு
பூண்டு - நான்கு பெரியது
கறிவேப்பிலை - கொஞ்சம்
கொத்தமல்லி - கொஞ்சம்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு மேசக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
வெந்தய பொடி - கால் தேக்கரண்டி
செய்முறை:
மொச்சை கொட்டையை லேசாக வறுத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொஞ்ச நேரம் ஊறினால் மெல்ல தோல் உரிந்து வரும் எல்லாவற்றையும் உரித்து தனியாக வைக்கவும்.
வெங்காயம் தக்காளி பொடியக அரிந்து வைக்கவும்.
உருளைக்கிழங்கை மீடியமாக அரிந்து வைக்கவும். முருங்கைக்காயை ஆறாக நறுக்கவும். கத்திரிக்காயை நான்கு நான்கு துண்டுகளாக போடவும். நறுக்கியதை தண்ணீரில் போட்டு வைக்கவும்
குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பூண்டு தட்டி போட்டு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதக்கி தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து மிளகாய் தூள், தனியாத் தூள், வெந்தயப்பொடி, மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கி முதலில் உருளைக்கிழங்கு, மொச்சைகொட்டையும் சேர்த்து சிம்மில் ஐந்து நிமிடம் வேகவிடவும்.
பிறகு முருங்கை, கத்திரி சேர்த்து புளியையும் கரைத்து ஊற்றி கொதி வந்ததும் குக்கரை மூடி மூன்று விசில் போடவும்.
ஆவி அடங்கியதும் தேங்காய் ஊற்றி பொரித்த கருவாடை போட்டு இறக்கவும்