மொசைக் கடல் பாசி
தேவையான பொருட்கள்:
கடல் பாசி - 50 கிராம்
சீனி - தேவையான அளவு
ஃபுட்கலர் - சிறிது
முட்டை - ஒன்று
தேங்காய் பால் - அரை கப் (முதல் பால் மட்டும்)
வெனிலா எசன்ஸ் - கால் தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கடல் பாசியை அதில் போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காய் பால், முட்டை சேர்த்து கலக்கி வைக்கவும்.
அடுப்பில் வைத்து கடல் பாசி கரையும் வரை கொதிக்க விடவும். கடல் பாசி நன்றாக கரைந்ததும் சீனி சேர்க்கவும்.
சீனி கரைந்ததும் முக்கால் வாசி கடல் பாசியை ஒரு தட்டில் வடிகட்டி ஊற்றவும். அதில் ஃபுட்கலர் போட்டு உடனே கலக்கி விடவும்.
மீதம் இருக்கும் கடல் பாசியில் வெனிலா எசன்ஸ் கலக்கி வைத்து இருக்கும் பாலையும், முட்டையும் அதில் ஊற்றி திரியும் வரை கொதிக்க விடவும்.
அதை ஊற்றி வைத்த கடல் பாசியின் மேல் ஊற்றி கலக்கி விடவும்.
நன்றாக ஆறிய பின் தேவையான வடிவில் வெட்டவும். ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும். சுவையான மொசைக் கடல் பாசி தயார்.