மைதா மாவு இனிப்பு பிஸ்கேட்
0
தேவையான பொருட்கள்:
மைதா - ஒரு கிலோ
நெய் - கால் கிலோ
முட்டை - நான்கு
சர்க்கரை - முக்கால் டம்ளர்
சோடா மாவு - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு பின்ச்
செய்முறை:
சக்கரையை பொடித்து கொள்ளவும்.
மைதாமாவை லேசாக வறுக்கவும் அப்பதான் பொறு பொறு என வரும்.
அதில் உப்பு, சோடாமாவு, பொடித்த சர்க்கரை மற்றும் நெய்யை உருக்கி போடவும்.
போட்டு அனைத்தையும் சப்பாத்தி மாவு பதத்திற்கு நல்ல பிசைந்து கொஞ்சம் தடிமனான சப்பாத்தியாக உருட்டி வேண்டிய வடிவத்தில் டைமண்ட் ஷேப்பிலோ, சாக்லேட் ஷேப்பிலோ கட் செய்து வாணலியில் எண்ணெயை காய வைத்து கருகாமல் பொரித்தெடுக்கவும்.
சுவையான மாலை நேர சிற்றுண்டி