மைதா கொழுக்கட்டை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்

பால் - 1/4 கப்

உப்பு - 1பின்ச்

பாசிப்பருப்பு - 1/4 கப்

சர்க்கரை - 1/2 கப்

தேங்காய்துருவல் - 1 கப்

ஏலப்பொடி - 1 பின்ச்

நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

பாலில் உப்பு கலந்து மைதாவை கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.

பாசிப்பருப்பை சிவக்க வறுத்து கழுவி விட்டு நன்கு உலர விடவும்.

தேங்காய்துருவலில் சர்க்கரை, ஏலப்பொடி, பாசிப்பருப்பை கலந்து வைக்கவும். இப்பொழுது இனிப்பு பூரணம் தயார்.

மைதாவை நெல்லிக்காய் அளவு உருட்டிக்கொள்ளவும்.

சப்பாத்திக்கட்டையில் மெல்லிய சப்பாத்தியாக இட்டு நடுவில் 1 டேபிள்ஸ்பூன் அளவு பூரணத்தை வைத்து அரைவட்ட வடிவில் இரண்டாக மடக்கவும்.

ஓரங்களை பிரியாதவாறு ஒட்டவும்.

இட்லி தட்டில் துணி விரித்து ஒன்றின் மீது மற்றது ஒட்டாமல் அடுக்கி. 10 நிமிடம் வேகச்செய்யவும்.

சூடாக இருக்கும் பொழுதே மேலே நெய் தடவி பரிமாறவும்.

சாதரணமாக கொழுக்கட்டை அரிசி மாவில் தயாரிப்போம். இது மைதா மாவில் செய்தது வித்தியாசமாக இருக்கும்.

குறிப்புகள்: