மேங்கோ ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள்:
மாம்பழக் கூழ் - ஒரு டின் (ஒரு கிலோ)
கன்டென்ஸ்டு மில்க் - ஒரு டின்
முற்றிய தேங்காய் - ஒன்று
சீனி - 250 கிராம்
சோள மாவு - 50 கிராம்
செய்முறை:
தேங்காயை துருவி திக்கான பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிது எடுத்து சோளமாவை கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொண்டு மீண்டும் அதோடு கலந்து விட வேண்டும்.
அத்துடன் கன்டென்ஸ்டு மில்க் முழுவதையும் ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.
மாம்பழக் கூழையும், சீனியையும் சேர்த்து நன்றாக கரைத்து அதில் ஊற்றி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃபிரிட்ஜில் 2 மணி நேரம் உறைய வைக்க வேண்டும்.
பிறகு அதை மிக்ஸியில் போட்டு 2 அல்லது 3 நிமிடங்கள் ஓடவிட்டு, மீண்டும் அதே பாத்திரத்தில் ஊற்றி 2 மணி நேரம் உறைய விட வேண்டும்.
உறைந்தவுடன் ஐஸ்கிரீம் கரண்டியால் எடுத்து கப்களில் வைத்து பரிமாறலாம். இது ஒரு மிக சுலபமான, டேஸ்ட்டியான மேங்கோ ஐஸ்கிரீம்.