மூவர்ண நட்ஸ் கடல்பாசி
தேவையான பொருட்கள்:
கடல் பாசி - 15 கிராம்
சர்க்கரை - அரை டம்ளர்
பாதாம் பிளேக்ஸ் - ஆறு தேக்கரண்டி
நன்னாரி சிரப் - ஒரு குழிக்கரண்டி
ரோஸ் எசன்ஸ் - இரண்டு துளி
பாதாம் எசன்ஸ் - இரண்டு துளி
தண்ணீர் - 3 3/4 டம்ளர்
செய்முறை:
கடல்பாசி செய்வதற்கு மேற்சொன்ன தேவையானப் பொருட்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 3 3/4 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கடல்பாசியை உதிர்த்து போட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு அடுப்பில் வைத்து கடல்பாசி கரையும் வரை காய்ச்சவும்.
அதிலுள்ள தண்ணீர் முக்கால் டம்ளர் அளவாக வற்றியதும், காய்ச்சி வைத்திருக்கும் கடல்பாசியை மூன்று பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். அவை ஒவ்வொன்றிலும் தனித்தனியாக நன்னாரி, ரோஸ், மற்றும் பாதாம் எசன்ஸ்களை சேர்க்கவும்.
பிறகு பாதாம் பிளேக்ஸ்களை இரண்டு இரண்டு கரண்டி அளவு எடுத்து ஒவ்வொரு பாத்திரத்திலும் தூவவும். பாத்திரத்தை வெளியிலேயே வைத்திருந்து ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
நன்கு குளிர்ந்ததும் ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
சுவையான மூவர்ண நட்ஸ் கடல்பாசி தயார்.
குறிப்புகள்:
இது இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு காலங்களில் மாலை நோன்பு திறக்கும் போது செய்வது. உடலுக்கு மிகவும் குளிர்ச்சி, கொளுத்தும் கோடையிலும் இதை செய்து சாப்பிடலாம். வாய் புண் மற்றும் வயிற்று புண்ணை ஆற்றும்.