மூளை முட்டை பொரியல்

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மூளை - இரண்டு

முட்டை - மூன்று

வெங்காயம் - நான்கு

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்றரை தேக்கரண்டி

தக்காளி - மூன்று

பச்சைமிளகாய் - இரண்டு

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேகரண்டி

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லித்தழை - கால் கட்டு

எண்ணெய் - மூன்று தேக்கரண்டி

பட்டை - ஒன்று சிறியது

செய்முறை:

மூளையை மேலே உள்ள மெல்லியதோலை எடுத்து விட்டு கட் பண்ண வேண்டாம். குழையாமல் புளி வடிகட்டியில் போட்டு நான்கு தடவை கழுவி நீரை வடிகட்டி அதில் மஞ்சள்துள், உப்பு, மிளகாய்தூள் போட்டு விரவி வைக்கவும்.

எண்ணெயை காய வைத்து பட்டையை போட்டு வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்ல வதக்கி இரண்டு நிமிடம் சிம்மில் வைக்கவும்.

பிறகு தக்காளி, பச்சைமிளகாய் ஒடித்து போடவும் தக்காளி வெந்ததும் ஊறவைத்த மூளையை போட்டு மூடிபோட்டு சிம்மில் வைத்து இரண்டு நிமிடம் தனலில் விடவும்.

ரொம்ப போட்டு கிளறாமல் உடையாமல் பிரட்டவேண்டும்.

இரண்டு பக்கமும் வெந்ததும் மூன்று முட்டையை நல்ல அடித்து அதன் மேல் ஊற்றி மேலும் வேக விடவும். இரண்டு பக்கமும் தோசை திருப்புவது போல் திருப்பி வேக விட்டு மீண்டும் ஒரு முறை நன்றாக பிரட்டி கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

குறிப்புகள்: