முர்கி வறுவல்
0
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2கிலோ
நீட்டமாக அரிந்த வெங்காயம்- 1
அரைத்த வெங்காயம்- 1
பிரியாணி இலை- 1
கரம் மசாலா- 1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- 2ஸ்பூன்
மிளகுத்தூள்- 4ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
எண்ணெய்- 3கரண்டி
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு நறுக்கிய வெங்காயத்தை போடவும் நல்ல பொன்னிறமாக வந்த பின்பு, பிரியாணி இலை சிக்கன் போட்டு வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது, அரைத்த வெங்காயம் மிளகுத்தூள், கரம்மசாலா, உப்பு போட்டு வதக்கவும்.
1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குறைந்த தணலில் 25நிமிடம் வேக வைத்து தண்னீர் இல்லாமல் திக்காக வந்த பின்பு இறக்கி பரிமாறவும்.