முர்கி குருமா
0
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2கிலோ
தயிர்- 1கப்
கரம் மசாலா- 1ஸ்பூன்
மஞ்சள்த்தூள்- 1/2ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
தேங்காய்பூ- 2ஸ்பூன்
மிளகுத்தூள்- 1ஸ்பூன்
இஞ்சிபூண்டுவிழுது- 1ஸ்பூன்
ப.மிளகாய்- 6
புதினா,கொ.மல்லி- தேவைக்கு
உப்பு ,எண்ணெய்-தேவைக்கு
செய்முறை:
சிக்கனுடன் இஞ்சி,பூண்டுவிழுது,கரம் மசாலா,உப்பு,மஞ்சள்த்தூள்,தனியாத்தூள், போட்டு விரவி 10நிமிடம் வைக்கவும்.
வாணலியில் 4 கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்த்வுடன் நீட்டமாக அரிந்த வெங்காயம், ப.மிளகாய் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிரட்டி வைத்த சிக்கன் கலவையினை சேர்த்து 10நிமிடம் வதக்கவும்.
பிறகு தயிர், கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வதக்கவும்
5 நிமிடம் கழித்து தேங்காய்பூ, மிள்குத்தூள்,நறுக்கிய கொ.மல்லி, புதினா போட்ட்டு 15 நிமிடம் குறைவான தணலில் வைத்து இறக்கவும்.