முட்டை வட்டலாப்பம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 8

சர்க்கரை - 2 ஆழாக்கு

தேங்காய் - 1

ஏலக்காய் - 3

நெய் - 1 டீஸ்பூன்

முந்திரி - 5, 6

உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் முட்டையை நுரை பொங்க நன்கு அடித்து வைக்க வேண்டும்.

மிக்ஸியில் சர்க்கரையை பொடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு தேங்காயை கெட்டி பால் எடுக்க வேண்டும். முட்டை அளவும், தேங்காய் பால் அளவும் ஒன்றாக இருக்க வேண்டும். இரண்டாம், மூன்றாம் பாலை குருமா (அ) தேங்காய் பால் சாதத்திற்கு உபயோகிக்கவும்.

தேங்காய் பாலில் பொடித்த சர்க்கரையை கலந்து, அடித்து வைத்த முட்டையையும் நன்கு கலந்து முந்திரியை பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்து போடவும்.

ஏலக்காயை தோலை எடுத்து விட்டு உள்ளே உள்ள விதையை எடுத்து வெறும் வாணலியில் வறுத்து பொடித்து, முட்டை கலவையில் கலக்கவும்.

குக்கரில் அடியில் தண்ணீர் ஊற்றி குக்கர் தட்டை போட்டு, தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து (அ) மூடி போட்ட டபராவிலும் வைக்கலாம்.

குக்கரில் தீயை 10 நிமிடம் அதிகமாக வைத்தும், 10 நிமிடம் சிம்மில் வைத்து பிறகு இறக்கி விடவேண்டும்.

ஆறியதும் குளிரவைத்து டைமன் ஷேப்பில் கட் செய்து பரிமாறவும்.

இடியாப்பத்திற்கும், தோசைக்கும் ஏற்ற டிஷ்.

குறிப்புகள்: