முட்டை சாண்ட்விட்ச்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேகவைத்த முட்டை - ஒன்று

ப்ரெட் - 8 ஸ்லைஸ்

வெண்ணெய் - 2 ஸ்பூன்

மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

நெய் - தேவையான அளவு

உப்பு - தேவைக்கு

செய்முறை:

தேங்காயை துருவுவது போல் முட்டையைத் துருவி எடுக்கவும்.

அதனுடன் வெண்ணெய், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

ப்ரெட்டின் ஒரங்களை நீக்கி விட்டு நான்கு துண்டுகளின் மீது இந்த முட்டை கலவையை பரத்தி அதன் மேல் மீதம் உள்ள நான்கு ப்ரெட் துண்டுகளை அழுத்தி வைக்க வேண்டும்.

பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிது நெய் விட்டு அது காய்ந்ததும், ப்ரெட் துண்டுகளை தோசைக்கல்லில் வைத்து இரண்டு பக்கங்களிலும் சிவக்கும் படி போட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: