முட்டை குருமா
தேவையான பொருட்கள்:
முட்டை - மூன்று
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
டால்டா - அரை தேக்கரண்டி
பட்டை - ஒன்று
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
தேங்காய் - கால் மூடி (பவுடர் என்றால் இரண்டு தேக்கரண்டி)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி, புதினா - கொஞ்சம்
பச்சை மிளகாய் - இரண்டு
மிளகாய் தூள் - ஒரு சிறிய தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
பட்டை - ஒன்று
மஞ்சள் தூள் - கால் தேக்கரன்டி
செய்முறை:
முதலில் எண்ணெய் + டால்டா காய வைத்து பட்டையை போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போகிறவரை வதக்கவும். பிறகு கொத்தமல்லி புதினா சேர்த்து தக்காளி, பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி, உப்பு சேர்த்து வதக்கி வதங்கியதும் ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு முட்டையை உடையாமல் உடைத்து அப்படியே ஊற்ற வேண்டும். ஊற்றி தேங்காயையும் கரைத்து ஊற்றி கிளறாமல் அப்படியே மூடி சிம்மில் வைக்கவும்.
பிறகு இரண்டு நிமிடம் கழித்து அப்படியே தோசை திருப்புவது போல் திருப்ப வேண்டும்
மற்றொரு பக்கமும் வேக விட வேண்டும். வெந்ததும் இறக்கி கலக்கி பரிமாறவும்.