முட்டை கபாப்
தேவையான பொருட்கள்:
முட்டை வேக வைத்து நீளமாக நாலாக நறுக்கியது - 3
உருளைகிழங்கு - 2
குருமிளகு தூளும் உப்பும் கலந்தது - 1/4 ஸ்பூன்
மல்லி இலை நறுக்கியது - 3 ஸ்பூன்
புதினா - 4 இலைகள் நறுக்கியது
மைதா - 1/4 கப்
ப்ரெட் கர்ம்ப்ஸ் - 3/4 கப்
வதக்க
=======
சின்ன வெங்காயம் - 10
இஞ்சி&பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கறி மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் முட்டையை வேக வைத்து ஒவ்வொரு முட்டையையும் நாலாக நீளமாக நறுக்கி வைக்கவும்..மொத்தம் 12 துண்டுகள் கிடைக்கும்.அதன் மேல் மிளகும் உப்பும் கலந்து தூவி வைக்கவும்
மைதாவை சிறிது தண்ணீரில் மாவு போல் கலந்து வைக்கவும்
உருளை கிழங்கை குக்கரில் 2 விசிலில் நங்கு வேக வைத்து உடைக்கவும்.
பின் வதக்க கொடுத்துள்ளவற்றை வரிசையாக ஒவ்வொன்றாக 1 ஸ்பூன் எண்ணையில் வதக்கவும்..அதில் உருளை கிழங்கை சேர்த்து மசித்து விடவும்
மசாலா சேர்த்த மசித்த கிழங்கில் இரு கைய்யளவு உருண்டையை இடதி கைய்யில் எண்ணை தடவிக் கொண்டு வைத்து வலது கைய்யால் தட்டவும்..தட்டிய கிழங்கு மாவின் நடுவில் ஒரு முட்டை துண்டை வைக்கவும்.முட்டையின் மஞ்சள் புறம் உட்புறமாக வருமாறு வைத்தால் முட்டை பிரிந்து வெளியில் கொட்டாது.
பின்பு கிழங்கை முட்டையை சுற்றி மூடி உருட்டவும்..நீளமாக ரக்பி பாளின் வடிவத்தில் உருட்டவும்
இதே முறையில் 12 துண்டெஉகளையும் உருட்டவும்..கிழங்கினையும் 12 பிரிவுகளாக வைத்தால் அளவு சரியாக வரும்
பின்பு உருட்டிய கிழங்கு முட்டை கபாப்களை மைதா கலவையில் முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் பிரட்டி எண்ணையில் வறுத்தெடுக்கவும்