முட்டை கட்லெட்
தேவையான பொருட்கள்:
முட்டை - 5+1
உருளைக்கிழங்கு - அரைக்கிலோ
வெங்காயம் - ஒன்று
தேங்காய்ப்பால் - அரை கப்
மிளகாய்தூள் - ஒரு கரண்டி
மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
மைதா - இரண்டு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 250 கிராம்
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
முட்டை, உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் எடுக்கவும். முட்டையை இரண்டாக நறுக்கி வைக்கவும்.
ஒரு முட்டையில் சிறிது உப்பு, மிளகு போட்டு கலக்கி வைக்கவும் வெங்காயத்தை மிக பொடியாக நறுக்கவும்
உருளைக்கிழங்கை நன்கு கட்டியில்லாமல் மசித்து அதனுடன் தேங்காய்ப்பால், தூள் வகைகள், வெங்காயம், மைதா போட்டு நன்கு பிசைந்து அதை சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
அதனை கையில் வட்டமாக தட்டி நடுவில் முட்டையை வைத்து மூடவும். அதனை கலக்கி வைத்த முட்டையில் நனைத்து ரொட்டிதூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்கவும்.